யாழ் 51 வது காலால் படை இராணுவத்தினர் ஏற்பாடு செய்த உரும்பிராய் உதைபந்தாட்ட அக்கடமியினர் இணைந்து வடமாகாண ரீதியாக நடத்தப்பட்ட 14 வயது பிரிவினருக்கான போட்டியில் 16 அக்கடமிகள் பங்குபற்றிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் அக்கடமி முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஈக்கிள் ஸ்டார் அகாடமி இரண்டாமிடத்தையும் உரும்பிராய் உதைபந்தாட்ட அகாடமி மூன்றாமிடத்தையும் பாசையூர் சென்.அன்ரனீஸ் அகாடமி நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
இவ் உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் அக்கடமி அணியினர் போட்டி ஆரம்பித்து 8 வது வினாடியில் முதலாவது கோலை போட்டு போட்டியில் ஒன்றுக்கு புச்சியம் என்ற கோல் கணக்கில் போட்டியின் இடை வேளையின் பின்னர் களத்தில் இறங்கி ஆறாவது நிமிடத்தில் கிளிநொச்சி ஈகிள் ஸ்டார் அக்கடமி அணியினர் முதலாவது கோலைப் போட இரண்டணியினரும் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலை வகுத்த போது சற்று நேரத்தில் யாழ் குருநகர் சென்.றொக்ஸ் அகாடமி அணியினர் தனது இரண்டாவது கோலை போட்டு ஒன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது
14 வயது பிரிவினருக்கான உதைபந்தாட்ட போட்டி ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக 20 கோல்களை போட்ட ஸ்டார் ஈக்கிள் அக்கடமி வீரர் யதுசன் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டிகள் இன்றைய தினம் உரும்பிராய் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 51 ஆவது இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விமலரத்ன மற்றும் சிறப்பு விருந்தினராக சென்.ஜோன்ஸ் கல்லூரியும் ஓய்வு பெற்ற முன்னாள் உப அதிபர் எஸ்.அன்ரனிப்பிள்ளை உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.