அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் போலி ரசீதுகளை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர்கள் மூக்குக் கண்ணாடிகளை கொள்வனவு செய்வதற்கான செலவுகளைப் பெற்றுக்கொள்ள அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
எனினும் அவர்கள் போலியான ரசீதுகளையே வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காவல்துறை மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளது.
இதுவரை 79 காவல்துறை உத்தியோத்தர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், மூக்குக் கண்ணாடிகளுக்கு போலி ரசீதுகளை வழங்கிய கடைகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.