அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!!!
இன்று திங்கட்கிழமை அம்பலாங்கொடை பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டின் சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் இவர் மீது அசிட் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து, காயமடைந்தவர் அயல் வீட்டாளர்களின் உதவியுடன் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
![]()