அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் (SLPP) அரசியல் பயணத்தை எந்தவித அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLPP கட்சியின் உறுப்பினருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் SLPP வீதியில் இறங்கி மக்களின் கோரிக்கையை நினைவூட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
“அச்சுறுத்தி எம்மை அடக்க முடியாது. நுகேகொடையில் நடைபெற்ற எங்கள் கூட்டம் முழுமையான வெற்றியாக அமைந்தது” என அவர் தெரிவித்தார்.
மக்களுக்காக SLPP தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் கூறினார்.
மேலும்,“மக்களின் பிரச்சினைகளை கேட்டு அவர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக தற்போது நாமல் ராஜபக்ச விளங்குகிறார். அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என இந்திக்க அனுருத்த வலியுறுத்தினார்.
![]()