கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட பத்து பேர் இன்று (05.08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, கடந்த 8ஆம் திகதி அத்துருகிரியவில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையில் நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தரவின்படி, மேற்கு தெற்கு குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சுரேந்திர வசந்த பெரேராவின் மகன் மற்றும் அவரது சடலத்தை கைப்பற்றியவர் ஆகியோரை சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.