இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழு நேற்று(05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் டெல்லியில் உள்ள சர்தார் படேல் பவனில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதகாவும் இக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் உடனிருந்துள்ளார் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு , நட்புரீதியான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது .