வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் யூசர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாட்ஸ் அப்பில் Delete for Everyone என்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உரையாடுவதற்கு அதிகமாக நாம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறோம். Office team உரையாடல்களும், நண்பர்களுடனான அரட்டைகளும், வாட்ஸ் அப் குரூப்களிலேயே பெரும்பாலும் நடக்கின்றன. சமயங்களில், வாட்ஸ் அப்பால் நாம் பல்வேறு சிக்கலிலும் மாட்டிக்கொள்வோம்.
வாட்ஸ் அப்பில் சில நேரங்களில், தவறுதலாகவோ அல்லது சரிபார்க்காமல் எழுத்துப் பிழையுடனோ மெசேஜ் அனுப்பி விடுவோம். அல்லது யாருக்கேனும் பிரைவேட் சாட்டில் அனுப்புவதற்குப் பதிலாக, குரூப்பில் அந்த மெசேஜை அனுப்பி விடுவோம். மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு கவனித்து உடனடியாக அதனை நீக்க முயற்சிப்போம்.
அப்படி, வாட்ஸ் அப் சாட்டில் நாம் அனுப்பிய மெசேஜை மொத்தமாக அழிக்க நினைத்து, வாட்ஸ் அப்பில் Delete for Everyone என கொடுப்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால், அந்த மெசேஜ் நமக்கு மட்டும் அழிந்துவிடும்.
ஆனால், மறு முனையில் உங்கள் மெசேஜை பெற்றவர் அதனை பார்க்க முடியும். இப்படியாக, நமது மெசேஜை தவறுதலாக அனுப்பிவிட்டு, அதனை டெலீட் செய்ய நினைத்து, நமது சாட்டில் மட்டும் நீக்கிவிட்டு என்ன செய்வது எனக் கலங்கிப்போய் இருப்போம். அப்படி, வாட்ஸ் அப் சாட்டை திரும்பப் பெற முயன்று தெரியாமல் Delete for me எனக் கொடுத்துவிட்டு வருந்துகிறீர்கள் என்றால், கவலையே வேண்டாம்.