Tamil News Channel

அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்!  

பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது.

இதன்போது 200 கசிப்பு போத்தல்கள் மற்றும் 1250 லீற்றர் கோடாவுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 48 வயதுடைய தாயும் அவரது 26 வயது மகளும் கசிப்பு கடத்தல் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதால் பேராதனை போவல பேருந்து வீதியில் இருந்து சுமார் 1 1/2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சல்களை நடத்தி வந்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts