Wednesday, June 18, 2025

அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்…

Must Read

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக (19.06) மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img