நேற்று மாலை மஹவெல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இரும்பு கம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களை பயன்படுத்திய சிலரால் இவர் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் மஹவெல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.