
அடுத்தடுத்து ஒரே நாளில் வெளியாகும் 4 தமிழ் படங்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது.
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அதே நாளில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படமும் வெளியாகிறது.
கடந்த வாரம் தான் இதற்கான அறிவிப்பும் வெளிவந்தது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படமும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
இதுவரை மூன்று நட்சத்திரங்கள் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அருள் நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிமாண்டி காலனி திரைப்படமும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வருகிற ஓகஸ்ட் 15ஆம் திகதி தங்கலான், அந்தகன், ரகு தாத்தா மற்றும் டிமாண்டி காலனி என 4 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.