February 11, 2026
அடுத்த 20 வருடங்களுக்கு  ரணிலே ஜனாதிபதி.
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

அடுத்த 20 வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி.

Feb 13, 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பீடு செய்யக்கூடிய உலகத் தலைவர்கள் எவரும் இல்லை எனவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை விடவும் ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க உலகிற்கே தலைவர் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்ததோடு ரணில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றவுடன் அனைவரும் ஒன்றிணைந்து அவரை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.

ஏனெனில் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அச்சம் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பதினைந்து மற்றும்  இருபது ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்ற எவரும் முயற்சிக்க வேண்டாம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *