மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்டகப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.
பின் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2