நடிகை ஸ்ரீதிவ்யா கருப்பு சேலையில் குறையாத அழகுடன் இருக்கும் படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகை ஸ்ரீ திவ்யா
தமிழ் சினிமாவில் “ வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளக்கார துறை , இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ திற என்ற திரைப்படத்தில் நடித்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஸ்ரீதிவ்யா குறிப்பிட்ட சில வருடங்கள் சினிமா பக்கமே இல்லாமல் இருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்திக்கு துணையாக நடித்திருந்தார்.
சேலையில் சுண்டியிழுக்கும் அழகு
இந்த நிலையில், கம் பேக் கொடுக்கும் விதமாக, தமிழில் ரெய்டு என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் உடம்பை காட்டி வாய்ப்பு தேடும் நடிகர்கள் இருக்கும் போது நடிகை ஸ்ரீ திவ்யா, கவர்ச்சியான வேடங்களில் நடிக்காமலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இப்படியொரு நிலையில், சமூக வலைத்தளங்களில் சமீபக் காலமாக ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, கருப்பு சேலையில் குறையாத அழகுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“கம்பேக்கிற்கு தயாராக இருக்கீங்களா?” எனக் கருத்துக்களை பகிரந்து வருகிறார்கள்.