எத்தனையோ புதுப்புது தொலைபேசிகள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. அந்தவகையில் உலகளாவிய ரீதியில் எந்த ஸ்மார்ட் போன் முதலிடத்தில் உள்ளது எனப் பார்ப்போம்.
counterpoint research இன் சமீபத்திய தரவின்படி, அப்பிள் மற்றும் செம்சங் இரண்டும் தங்களது இடத்தை தக்க வைத்துள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டில் விற்பனை பட்டியில் பத்தில் ஒன்பது இடங்களைப் இவையிரண்டும் பிடித்துள்ளன.
அதிகமாக விற்பனை செய்யப்படும் தொலைபேசிகளில் ஐபோன் 15, 15 ப்ரோ மெக்ஸ், 15 ப்ரோ ஆகியன முதல் மூன்று இடங்களை தக்க வைத்துள்ளன.
மேலும் ஐபோன் 14 ஆறாவது இடத்திலும் Samsung galaxy A15 மொடல்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைத் தக்கவைத்துள்ளன.
2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஐபோன் 15 ப்ரோ மெக்ஸ் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருந்தது.