2024 ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்து ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
முதியோர் மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் மேலதிகமாக இந்த கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.