Tamil News Channel

அதிகரித்த அடையாள அட்டைக் கட்டணம்

புதிய தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 150ரூபாவாக அறவிடப்பட்ட நிலையில், தற்போது அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் நிலவும் தொழில்நுட்ப பற்றாக்குறையும் ஒரு காரணமென தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்  கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts