தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, 450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை தற்போது 550 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சுங்க வரி அதிகரிப்பே விலை அதிகரிப்புக்கு காரணம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.