கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 0.44 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
இதற்கமைய பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் அம்மட்டத்துக்கு மேல் பதிவாகும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.