கொழும்பு – ஒருகொடவத்தை பிரதேசத்தில் கொள்கலன் வண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளையிலிருந்து பயணித்த கொள்கலன் வண்டி ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியானது பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



