இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கே தமது ஆதரவென அறிவித்துள்ளது.
இவ் அறிவித்தலை கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் வெளிநாட்டு ஊடகமொன்றின் நேர்காணலின் போது இதை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை ரணில் மீட்டெடுத்து ஸ்திரப்படுத்தியுள்ளார்.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது, எவரும் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
நாட்டில் தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஸ்தம்பிக்கும்.
எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் மக்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிடும்.
பெரும்பான்மையான மக்கள் ரணில் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவார் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் சிறந்த உறவுகளைப் பேணி நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். என்று செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.