500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுள்ளார்.
நீண்ட விசாரணையின் பின்னர் குற்றவாளி என நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 500 ரூபாய் இலஞ்சத் தொகையையும் குறித்த குற்றவாளியிடம் இருந்து வசூலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.