December 17, 2025
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு !
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு !

Jun 3, 2024

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகத் தயாராக இருப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களைக் கருத்திற்கொண்டு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேடபிரிவு சேவை நேற்று  ஞாயிற்றுக்கிழமை (02) மாலை 06.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட நடவடிக்கை அறைக்குத் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 011- 2 43 92 12, 011 – 20 130 36 அல்லது 011- 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலமும் அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

இந்த விசேட செயற்பாட்டு அறையானது பொலிஸ் தலைமையகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைமைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *