கிளிநொச்சி தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல் யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்தமணலும் போலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் போது 28 கியூப் மணல்போலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதே பகுதியில் இருந்து அனுமதி பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் போலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் போலீசாரால் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதி போலீஸ் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்கள் நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீசார் தெரிவித்துள்ளனர்.


(கிளிநொச்சி நிருபர்:- ஆனந்தன்..)