பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்பட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தமும் இன்று (13) காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.