அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது.
சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாகவும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பதவியேற்ற நிலையில், இவ்வாறு இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை, இலங்கைக்கு முன்னேற்ற ஆரம்பம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.