Tamil News Channel

Blog Post

Tamil News Channel > மருத்துவம் > அன்னாசி பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்னு தெரியுமா?

அன்னாசி பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்னு தெரியுமா?

அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அதிக சத்துக்களைக் கொண்ட அன்னாசி பழம் வெளியே கரடுமுரடாகவே இருக்கின்றது. ஆனால் உள்ளே இருக்கும் பழம் மிகவும் சுவையுடனும், அதிக இனிப்புடனும் காணப்படும்.

ஆனால் அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் பருகக்கூடாது என்று பலரும் கூறுவார்கள். இதற்கான அறிவியல் மற்றும் ஆரோக்கிய காரணத்தை தெரிந்து கொள்வோம்.

ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?

அசிடிட்டி:

அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்கிற என்சைம் இருக்கிறது. இது, உடலில் இருக்கும் புரதத்தை உடைக்கிறது. இதனால், அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால், அது அசிடிட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அமில ரிஃப்ளக்ஸ் அல்லது சென்சிடிவான வயிறு உள்ளவர்களுக்கு, இந்த கலவை வீக்கம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், அன்னாசி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூறுவார்கள்.

அதிகரித்த உணர்திறன்:

அன்னாசிப்பழத்தின் அமிலங்கள் நாக்கு மற்றும் வாயை சற்று சென்சிடிவ் அல்லது புண் ஆக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். குறிப்பாக அதிக அளவில் உட்கொண்டால், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அன்னாசி பழத்தை சாப்பிட்ட பின்பு, குளிர்ந்த நீரை உடனடியாகக் குடிப்பதால் இந்த எரிச்சல் தீவிரமடையலாம் அல்லது சிலருக்கு லேசான எரியும் உணர்வு ஏற்படலாம்.

இதற்கு பதில் என்ன செய்யலாம்?

உங்களுக்கு அதிக உணர்த்திறன் வாய்ந்த சென்சிடிவான வயிறு கொண்டவர் என்றால், அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்க வேண்டாம்.

அன்னாசிப்பழம் சாப்பிட்ட பிறகு சுமார் 20-30 நிமிடங்கள் காத்திருந்து தண்ணீர் குடிக்கவும்.

அசௌகரியம் ஏற்பட்டால் உங்கள் வாயை சாதாரண தண்ணீரில் கழுவவும்.

அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு, மிகவும் குளிர்ந்த நீரை குடிப்பதைத் தவிர்க்கவும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *