December 17, 2025
குஜராதை வீழ்த்திய பஞ்சாப்..!
News News Line Sports Top Updates புதிய செய்திகள்

குஜராதை வீழ்த்திய பஞ்சாப்..!

Apr 5, 2024

இவ்வருடத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் (Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் (Punjab Kings) அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது.

குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் (Shubman Gill) 89 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் ககிசோ ரபாடா (Kagiso Rabada) 2 விக்கட்டுக்களையும், ஹர்ப்ரீத் ப்ரார் (Harpreet Brar) மற்றும் ஹர்ஷல் படேல் (Harshal Patel) ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் பஞ்சாப் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 19.5 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

பஞ்சாப் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷஷாங்க் சிங் (Shashank Singh) 61 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

குஜராத் அணிக்கு நூர் அஹ்மட் (Noor Ahmad) 2 விக்கட்டுக்களையும், தர்ஷன் நல்கண்டே (Darshan Nalkande), உமேஸ் யாதவ் (Umesh Yadav), அஷ்னதுல்லாஹ் ஒமர்ஷை (Azmatullah Omarzai), ரஷீத் கான் (Rashid Khan) மற்றும் மோஹிட் சர்மா (Mohit Sharma) ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங் (Shashank Singh) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது நிலையில் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *