February 9, 2026
அபார வெற்றியுடன் முதல் நிலைக்கு முன்னெறிய கொல்கத்தா..!
News News Line Sports Top Updates புதிய செய்திகள்

அபார வெற்றியுடன் முதல் நிலைக்கு முன்னெறிய கொல்கத்தா..!

Apr 4, 2024

இவ்வருடத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றது.

கொல்கத்தா அணி சார்பாக சுனில் நரேன் (Sunil Narine) 85 ஓட்டங்களையும், அங்கிரிஸ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi) 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் அன்ரிச் நோர்ச்ஜே (Anrich Nortje) 3 விக்கட்டுக்களையும், இஷாந்த் சர்மா (Ishant Sharma) 2 விக்கட்டுக்களையும் டெல்லி சார்பாக அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி 17.2 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

டெல்லி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரிஷப் பண்ட் (Rishabh Pant) 55 ஓட்டங்களையும், திரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) 54 அதிகபட்சமாகப் பெற்றனர்.

கொல்கத்தா அணிக்கு வைபவ் அரோரா (Vaibhav Arora), வருன் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும், மிட்சல் ஸ்டார்க் (Mitchell Starc) 2 விக்கட்டுக்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா வீரர் சுனில் நரேன் (Sunil Narine) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது நிலைக்கு முன்னேறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *