கூகுள் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் தென்கொரிய பிரிவுக்கு இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பில் சட்ட விதிகளை மீறிய காரணத்துக்காக தென்கொரிய அரசு அபராதம் விதித்துள்ளது.

கூகுளின் கொரிய பிரிவுக்கு, 3 மில்லியன் வோனும் அப்பிளுக்கு 210 மில்லியன் வோன் அபராதத்தையும் கொரிய தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது.

கூகுள், அப்பிள் உட்பட இருப்பிட தரவு சேகரிப்பு விடயத்தில் 188 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பிட தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழான வழக்கமான சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த விதி மீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சமூக பாதுகாப்பு மீதான அக்கறை மிகவும் முக்கியமானது என தொலைத் தொடர்பு ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here