அமெரிக்காவின் ஒகாயோவின்  யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர்காயமடைந்துள்ளனர் இருவர் காணாமல்போயுள்ளனர்.

ஒகாயோ மத்திய சதுக்கத்திற்கு அருகில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு  பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.வாயு கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது வெடிப்புசம்பவம் என உறுதியாக தெரிவிக்க முடியும் என யங்டவுனின் தீயணைப்புபிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கின்றோம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் ஆண் ஒருவரையும் பெண்ணையும் காணவில்லை என தீயணைப்பு படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here