Tamil News Channel

அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா ஒருபோதும் இருக்காது – கனடா பிரதமர்..!

063_2204533636-1-scaled-1024x683

அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக போருக்கு மத்தியில் அவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

‘மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்” என்று கனடாவின் புதிய பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமது அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமராக பதவியேற்றதன் பின்னர் தமது முதலாவது சர்வதேச விஜயமாக அடுத்த வாரம், அவர் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *