அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பூங்காவிற்கு அருகில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர் 42 வயதுடையவர் எனவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 4-78 வயதுடையதிற்குட்பட்டவர்கள் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 8 மற்றும் 29 வயதுடைய இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஓக்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.