அமெரிக்காவில் ராக்போர்ட், இல்லினாய்ஸ் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு நான்குபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஏனைய நான்குபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கருத்துக்கிணங்க வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச் சம்பவம் உள்நாட்டு நேரத்தின்படி நேற்று பகல் 1:15 மணிக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாக ராக்போர்ட் பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.