November 18, 2025
அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்!
World News

அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்!

Jun 5, 2024

லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும் விரைந்து செயற்பட்டதால் தூதரகமும் எங்கள் குழுவினரும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரியாவை சேர்ந்த ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என லெபனானின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனடியாக பதில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்  இதன்போது தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் காயமடைந்தார் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *