அமெரிக்க தூதுவருடன் பிரதமர் சந்திப்பு : கல்வி மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தூதுவர் விளக்கமளித்தார்.
மேலும், ஃபுல்பிரைட் சர்வதேச புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை–அமெரிக்க கல்விசார் உறவுகளை வலுப்படுத்துவது முக்கியம் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
உலகின் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு கல்வி, கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்கும் முக்கிய சர்வதேச புலமைப்பரிசில் திட்டமாக ஃபுல்பிரைட் திகழ்கிறது.
இதேவேளை, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி மறுசீரமைப்புகளை முன்னிட்டு, கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் மனிதவள அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் இணங்கும் வகையில் அறிஞர்களை உருவாக்குவது மிகவும் முக்கியம் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
![]()