அனைத்து வகை அமெரிக்க விசா வைத்திருப்பவர்களுக்கும், விசா விண்ணப்பதாரர்களுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துவது அமெரிக்க சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும்.
அது விசா தொடர்பில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது எனவும் தமது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிரப்பட்ட செய்தியில் அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துவது தொடர்பான கைதுகள் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல் ஒரு தனிநபரின் விசா அந்தஸ்தையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் தூதரகம் எச்சரித்தது.
“மதுபோதையில் வாகனம் செலுத்துவது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது. நீங்கள் கைது செய்யப்பட்டால், உங்கள் அமெரிக்க விசா ரத்து செய்யப்படலாம். மேலும் எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு நீங்கள் தகுதியற்றவராக இருக்கலாம்” எனவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் விசா சலுகைகளைப் பராமரிக்க அமெரிக்க சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியது.



