அமைச்சர்களின் பங்களாக்கள் தொடர்பாகப் பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த பங்களாக்களின் மதிப்பீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது.
இந்த பங்களாக்கள் தொடர்பாகப் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த முன்மொழிவுகளில் சிறந்த திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த பங்களாக்களைப் பொருளாதார ரீதியாக வினைத்திறன் மிக்கதாகப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் அமைச்சர் பங்களாக்களை வாடகைக்கு விடுமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அந்தக் கோரிக்கை தொடர்பான விடயத்தையும் பரிசீலித்து வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.