யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(17) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.