அரசாங்கத்துடன் இணைந்து சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படும் செய்திகளை முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மறுத்துள்ளார்.
எனினும் தனக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அமைச்சுப் பதவி அல்லது அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் நெருங்குவதால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மைய நாட்களில் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.
இதன் போது பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை அவர் பாராட்டினார்.
நாட்டை விரைவாக ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் திறமையை பலர் சந்தேகித்தாலும், அது தற்போது நிஜமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல பார்வை மற்றும் செவித்திறன் கொண்ட எவரும் இந்த சாதனையை ஒப்புக் கொள்ள வேண்டும் என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.