கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கேக் கண்காட்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் நிர்வாண புகைப்படங்களை இணைத்து அக்கண்காட்சியின் பெண் ஏற்பாட்டாளருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாகக் கூறப்படும் புகைப்பட கலைஞர் ஒருவர் கண்டி பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கேக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கேக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களைக் அக்கண்காட்சியின் ஏற்பாட்டாளருக்கு அனுப்பும் போது தவறுதலாக இந்த நிர்வாண புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கண்டி பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here