மணமகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பத்திரிகையில் விளம்பரம் செய்து வாட்ஸ்அப் மூலம் புகைப்படங்கள் பரிமாற்றி லட்சகணக்கான பண மோசடியில் ஈடுபட்டுள்ளர்.
மேலும், மோசடியில் சிக்கி ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பத்து என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இணையம் ஊடாக பெண்கள் மோசடிகளில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.