யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த படகுச்சேவையானது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகுச்சேவையினை கைவிடுவதற்க்கு யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ளுமாறும், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கு மாறும் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் மாவட்டச் செயலாளருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தலைவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.