நடிகை நயன்தாராவின் மகன் அம்மா நடித்த நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற தங்கமே பாடலை பாடி அசத்தியுள்ளனர்.
நடிகை நயன்தாரா விக்னேஷ்
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனைக் கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக வலம்வருகின்றனர்.
இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர். நயன்தாராவை காதலிக்கும் போது அவரை நினைத்து காதல் பாடல்களை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
மகன்களின் அசத்தலான பாடல்
நானும் ரெளடி தான் படத்தின் போது காதலிக்க தொடங்கிய இந்த தம்பதிகள், நயன்தாராவை நினைத்து விக்னேஷ் பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படத்தின் தங்கமே பாடலை பார்த்து நயன்தாராவின் மகன்கள் இருவரும் க்யூட்டாக பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் தங்கள் மழலை மொழியால், அடடடடா… அப்பப்பப்பபா என பாடுவதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.