‘அய்யோ சாமி’ என்ற பாடலுக்கு எடிசன் விருது!
‘அய்யோ சாமி’ என்ற வைரல் பாடலுக்காக இலங்கை பாடகி வின்டி குணதிலக இந்தியாவில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவின் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 16வது எடிசன் விருதுகள் விழாவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடலுக்கான விருதை விண்டி குணதிலக வென்றார்.
விண்டி குணதிலக மற்றும் சானுகா விக்கிரமசிங்கவின் பாடல், சிங்களம் மற்றும் தமிழ் வரிகளின் கலவையாகும் மற்றும் இந்திய தமிழ் இசைத்துறையில் நன்கு அறியப்பட்ட இலங்கை பாடலாசிரியர் ‘பொத்துவில் அஸ்மின்’ என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
விண்டி குணதிலக்க, இந்திய ரசிகர்களின் கைதட்டலுடன், சானுகா விக்கிரமசிங்க மற்றும் பொத்துவில் அஸ்மினுடன் இணைந்து தனது விருதைப் பெற்றுள்ளார்.
![]()