Tamil News Channel

அரசியலில் இருந்து ஓய்வு: விஜயகலா மகேஸ்வரனின் திடீர் அறிவிப்பு..!

அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் நாடு சோமாலியாவின் நிலைக்குச் சென்றமைக்கு, மக்கள் தவறாக வாக்களித்து பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தமையே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது எனவும்  குறிப்பிட்டார்.

எனினும், கொரோனா இடர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் தங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் தாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை என்று விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts