Tamil News Channel

அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு..!

sanath nishantha wife in politics

கடந்த மாதம் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை அரசியலுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு  சனத் நிஷாந்த தொடர்பில் சமூகத்தில் தவறான சித்தாந்தத்தை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சில தரப்பினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts