மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று (22) காலை ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் அபே ஜனபல பக்ஷய கட்சியின் தலைவரான சமன் பெரேரா உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிபென்டரில் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.