July 8, 2025
அரச துறையின் சம்பளம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து பொய்யானது; கஞ்சன விஜேசேகர!
Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

அரச துறையின் சம்பளம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து பொய்யானது; கஞ்சன விஜேசேகர!

Oct 29, 2024

அரச துறையின் சம்பளம் தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அங்கீகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக கஞ்சன விஜேசேகர ‘X’ க்கு எடுத்துரைத்தார்.

“ஒரு குழுவை நியமிப்பதற்கும், அரச துறை மற்றும் சம்பள உயர்வுகளை மே 2024ல் மதிப்பீடு செய்வதற்கும் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தக் குழு, தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களை சந்தித்து அரச துறைப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் பரிந்துரைகளை இணைத்து தேவையான நிதியை ஒதுக்குவதற்கு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

திறைசேரி, வரவு செலவுத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் மற்றும் ஏனைய தேவையான பங்குதாரர்களின் அதிகாரிகளை இந்தக் குழு உள்ளடக்கியதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்திருந்த போதிலும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *