இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (04) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.